`நாடு ஏன் ரொம்ப வேகமா முன்னேருதுனா ?????????????

 (.....நீண்ட  நாட்களுக்கு பின் ஒரு பதிவு எழுதுறேன்......)

 கண் முன் நடந்த ஒரு நிகழ்வை பார்த்ததும் அதனை பற்றி ஒரு பதிவு எழுதனுன்னு அப்பப்ப தோணுறது வழக்கம் ..வீட்டுக்கு வந்ததும் நமக்கு இருக்குற 1000 வேலைல பதிவு எழுதுறது முடியாத காரியம் ஆயிடும் .....

சரி கோவமா ஆகுரிங்கனு நல்லவே தெரியுது .....அமைதி அமைதி நட்பு .....
எப்பயும்  போல ஒரு வேலைய செய்யாம இருக்கதுக்கு நாம சொல்லற பொய்யான காரணந்தான்......

ஆனா என்னோட சொம்பேரிதனத்தையும் மீறி இன்னைக்கு ஒரு விஷயம் என்ன பதிவ எழுத வச்சுடுச்சு ......

குறிப்பு :-  எனக்கு நகைச்சுவை  சுத்தமா வராது.....இல்லனா கபால்னு ஒரு  அருமையான முன்னுரை குடுக்கனுனு எனக்கும் ஆசைதான்..


சரி விசயத்துக்கு வரேன் ......நான் தரமணிலதான்  தங்கி இருக்கேன்....
இன்னிக்கு அருமைய மழை பெய்து  கொஞ்சம் நின்ற மாறி இருந்ததும் ஒரு டீ போட்டு வரலாமேனு போனேன்....டீ கடைக்கு பக்கதிலேய்தான் அரசு பள்ளி ஒன்னு இருக்கு..லேசா தூறல் விழுந்து கொண்டு இருந்த அந்த நேரத்தில் ஒரு 55 வயசு மதிக்கத்தக்க ஒரு ஆள் ஒரு பையன்ட ஏதோ அதி தீவிரமா பேசிக்கொண்டு இருந்தார்...

facebook  வாசிகளான  நமக்கு அடுத்தவன் என்ன பண்றான்னு தெரிஞ்சுக்கதான் ஆர்வம் பீறிட்டுக்கொண்டு வருமே ...அப்பறம் என்ன.....என்னால முடிஞ்ச அளவு அவங்க பேசுனத ஒட்டு கேட்டேன்.....அந்த மனிதன் ஒரு ஆசிரியர் ....வகுப்புக்கு வராத ஒரு மாணவன ,,,ஏண்டா நல்லாதானே படிக்கிற அப்பறம்  ஏன்டா  வகுப்புக்கு வரமாட்டேங்குற அப்டின்னு கேட்டு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருந்தார்....அதை கேட்டதும் இந்த அரசு பள்ளி ஆசிரியருக்கு என்ன ஒரு அக்கறைன்னு  தோணுச்சு ....நான் அவர சிறுத்தை படத்துல கார்த்திய ஜூம் பண்ணி ஜூம் பண்ணி உயரமா காட்டுவாங்களே அந்த மாறி மனசுக்குள்ள ஜூம் பண்ணி பார்த்துகிட்டேன்..

அடுத்த தரம் மன்மோகன் ஜி -அ பார்கைல இவருக்கு ஒரு பாரத ரத்னா அவார்ட் குடுக்க சொல்லணும்...இல்லனா ஒரு ஆஸ்கார் ஆச்சும் குடுக்க சொல்லனும்னு நினைச்சுக்கிட்டே டீ குடிச்சு முடிச்சேன் ......போனாதும் ஒரு பதிவ போடனுனு மனசுல தோனுச்சு .....தலைப்பு கூட  வைச்சேன் ...."மனிதருள் மாணிக்கம் "....எங்கயோ கேட்ட மாறி இருக்கா....?...காமராஜருக்கு பின்னாடி கல்வி கண் திறந்தது இவருதான்னு நினைச்சுகிட்டே நடந்து வந்தேன் .......அத்தோட முடிஞ்சுருந்தா சத்தியமா  இந்த பதிவ எழுதி இருக்க மாட்டேன்....

அப்ப ....அதுக்கு பின்ன்னடி என்ன நடந்ததுனா.....

"குற்றம் நடந்தது என்ன ? குற்றமும் பின்னணியும்  " ஸ்டைல் ல மீதி பதிவ படிங்க ......

டீ  கடையில் பார்த்த ஆசிரியர்  மீண்டும் பிள்ளையார் கோவில் அருகே  நின்று கொண்டிருந்ததால் பரபரப்பு...நேரடி காட்சிகள்...நடந்தது என்ன ?.....

அனைவருக்கும் கோபிநாத்தின் அன்பு வணக்கங்கள் .....

வழக்கமா  இந்த மாதிரியான ஆசிரியர்கள வாழ்க்கைல ஒருதடவ பார்கிறதே அதிசயம் ....ஆனா திரும்பவும் அதே ஆசிரியரை பார்த்தல்...அதுவும் மீண்டும் ஒரு மாணவனின் பெற்றோடிடம் அவனின் படிப்பு குறித்து பேசிகொண்டிருந்தால் ......வாருங்கள் சம்பந்தபட்ட நபரிடமே கேட்போம் ......

"என் பேரு குமார் ...நான் இங்க தான் பெரியார் தெருல குடி இருக்கேன் ...டீ கடைக்கு பக்கத்துல  தாங்க அந்த அதிசய காட்சிய பார்த்தேன்.....ஆசியர் ஒரு பையன வகுப்புக்கு வர சொல்லிட்டு  இருந்தாரு ...திரும்ப நான் இங்க பிள்ளையார் கோவில்ட பார்த்தா அவரே ஒரு பெற்றோர்ட உங்க பையன் நல்லா தானே படிக்கிறான் ...கொஞ்சம் பார்த்து வர சொல்லுங்கன்னு சொன்னாருங்க ....அத பார்த்ததும் ஒரே ஆச்சர்யமா போச்சுங்க ...அதுல இருந்து இந்த இடத்துக்கு வந்தாலே என் உடம்பு புல்லரிக்குங்க ...."

குமாரோட கருத்து நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் ,அதன் மீது நமக்கு பல கேள்விகள் எழுந்தது ..இது போல் நடக்க முடியாது என்பது நமுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.....அதை ,அதன் பின்னணியை விசாரிக்க இங்கனுக்குள்ள யாராச்சும் வெட்டியா  இருக்கங்களான்னு பாப்போம் வாங்க...

"ஹலோ பாஸ் ....உங்கல  தான் கொஞ்சம்  நில்லுங்க ......."

......

"ஹலோ  கட்டம்  போட்ட  சட்ட உங்களைதான் ....."

"என்னையா ?.....ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்  கேமராவ ஸ்டார்ட்  பண்ணிடாதிங்க "....."தல சீவிட்டேன் ...இப்ப ஸ்டார்ட் பண்ணுங்க  "

"சரி சொல்ல்லுங்க  சுமார் 7 மணி அளவில் இங்க ஒரு அதிசயம் நடந்ததா சொல்றாங்க அத பத்தி உங்களுக்கு எதாச்சும் தெரியுமா ....."

"ஆமா  அவங்க சொல்றதுலாம்  உண்மை தாங்க ..குமார்  வந்து ஊருக்குள்ள  இந்த அதிசயத பத்தி சொன்னாரு ...நாங்க யாரும் நம்பலை...அப்பறம் நாங்க ஒரு நாலு பேரு இங்க நேர வந்து பார்த்தப்பறம் தான் நம்புனம்...."

"அத பத்தி,அவர பத்தி வேற ஏதாவது தகவல் தெயர்யுங்களா ....?"

"அவரு இந்த ஸ்கூல்லைலாம் வேல பார்க்கவில்லை...அவரு டியூஷன் சொல்லி தருவருங்க ...மாசம் ஆனா கல்லா கட்டிருவாறு ...ஒரு நாள் லடே ஆனாலும் பசங்கள நின்னுக்க சொல்லிடுவாரு ...அப்பறம் இப்டி தான் வந்து கிளாஸ்கு வாடா ..கிளாஸ்கு வாடான்னு வந்து கேஞ்சிக்குனு இருப்பாருங்க ...இந்த ஆளுக்கு இதே வேலையா போச்சு ...... "

உண்மை இப்படி இருக்க ஊருக்குள் ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை...
மீண்டும் சந்திக்கலாம் நன்றி வணக்கம் ................


சரி இப்ப இது என்னுடைய version ....என்ன நடந்ததுனா ....நான் திரும்பவும் அவர பார்த்ததும்  ...நான் அவர் பக்கத்துலையே நின்னு பேசுறத கேட்டேன் ...நிசமா ரொம்ப பொறுப்பா ஒரு பையனோட  பெற்றோர்ட  பேசிகிட்டு  இருந்தாரு ....நிஜமாவே ஆர்வம் மிகுதியானதுல,உண்மையா சொல்லனுனா மரியாத மிகுதியானதால ...அந்த பெற்றோர்ட அவர் யாரு கேட்டேன் ...அவங்க சொன்னத தான் மேல பதிவு செஞ்சுருக்கேன் ......

இன்னைக்கு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மேல இருக்க அக்கறை அவங்க கற்ற பணத்த பொருத்து மாறுது .....

நான் படிச்ச ஸ்கூல்ல ஏன் உன் புள்ள ஸ்கூல்கு வரலன்னு வந்து விசாரிக்கற ,பார்க்கும் போதவது விசாரிக்கற ஆசியர்கள பார்த்துருக்கேன் ....ஆனா இன்னைக்கு அப்டி யாருமே இல்லைன்றது தான் உண்மை .........எல்லாரும் ஆசிரியர் பணியை 7 மணி நேரம் பார்குற வேலையா தான் பார்க்குறாங்க ...சமுதாயத்துக்கு செய்யுற கடமையா நினைக்கல....டியூஷன் படிக்கறவன் மேல மட்டும் இல்லாம வகுப்பு மாணவன்  மேலயும் வாத்தியார் அக்கறை காட்டுனா நல்லா இருக்கும்.................

(அய்யா காமராஜரே  என்ன மன்னிச்சுடுங்க .....உங்களோட  ஒப்பிட்டதுக்கு ......படிப்பவர்கள் மன்னிக்கவும் இந்த பதிவுக்கு இந்த தலைப்பு வச்சதுக்கு ....)