அன்புள்ள அப்பா ...............................

பொதுவாக ஆண்களின் அன்பு சரியாக புரிந்துகொள்ளபடுவதில்லை .........

.அதிலும் அப்பாக்களின் அன்பு ................?

நிஜத்தில நூறில் ஒருவரின் அன்பு கூட புரிந்து கொள்ளபடுவதில்லை ...... ஏன்? இதற்கு விடை மிக சாதரணமானது... அப்பாக்களின் அன்பு கண்டிப்போடு சேர்ந்தது... அதை புரிந்து கொள்ள பக்குவம் தேவை.......

ஒரு சில பெண் குழந்தைகள் அப்பாவின் அன்பை புரிதுகொள்கிறார்கள்....அனால் பசங்க .....ப்ச் ப்ச் .. புரிந்துகொள்வதே இல்ல ......

ஒரு முறை என் நண்பர்களுடன் "யார் அன்பு பெரியது?" அப்டின்னு விவாதம் செய்தேன் ........நான் அம்மாவோட பாசம் தான்னு பக்கவா பேசி கிட்டத்தட்ட எல்லாரையும் ஒத்துக்க வச்சுட்டேன் ,,,,,,

அவ்வளவு பெரிய விவாதத்துக்கு அப்பறமும்....... ஒரே ஒரு தோழி மட்டும் அப்பாவின் பாசமும் பெரிது தான் என்று தீர்க்கமாக , மிக தீர்க்கமாக சொன்னாள் ..........

நிலைமையை எனக்கு சாதகமாக தான் முடித்து கொண்டு திரும்பினேன் ,,

ஆனால் அவளின் தீர்கமான பேச்சில் உண்மை இருப்பதாகவே தோன்றியது,,,

அன்றிலிருந்து நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தேன்.........

ஒரு அப்பா தன் தினமும் வேலை முடிந்து வீடு திரும்பியதும் 24 வயதான தன் மகனிடம் "உனக்கு என்ன வேணும் ?" அப்டின்னு கேட்டுட்டு தின்பண்டம் வாங்கி வருகிறார்.......மகனின் வயது 24 என்பதை நினைப்பதில்லை.அவரை பொறுத்த வரை அவன் இன்னும் குழந்தை ...


மற்றொரு அப்பா காலேஜ் முடித்து வந்து தூங்கி கொண்டிருக்கும் தன் மகளுக்கு கால் பிடித்து விடுகிறார் ,, இத்தனைக்கும் அவர் அலுவலகத்திலும் நண்பர்களிடமும் கடுமையாக பேசுபவர்......அவருக்கு அவள் அம்மா போல ,,,,,,,,,,,,,,,,,,

இன்னொரு அப்பா , வயது அறுபது இருக்கும் ,அவரை அவரது மகள் திட்டி கொண்டிருந்தாள் ...பதில் சொல்ல முடியாமல் திண்டாடினார் . பார்க்க அவள் முதல் வகுப்பு ஆசிரியர் போலவும் ,அவர் வீட்டுபாடம் செய்யாத குழந்தை போலவும் இருந்தது..

பொதுவாக சின்ன குழந்தைகளிடம் எல்லோருமே பாசமாக இருப்பார்கள் ...........
அதனால் தான் அந்த நிகழ்வுகளை குறிப்பிடவில்லை..

அம்மாவின் பாசம் குழந்தைகளுக்கு எளிதில் புரிய காரணம் , அவளின் அருகாமை குழந்தைகளுக்கு எப்போதும் கிடைப்பது தான் ...

ஒரு வேலை , அப்பாவின் அருகாமை கிடைத்த குழந்தைகளுக்கு அவரின் பாசம் முழுதாக புரிந்துருக்குமோ?????????????

பின்குறிப்பு:-
மொத்ததுல என்ன சொல்ல வரேன்னா அப்பாவும் நம்ம மேல பாசமா தான் பா இருக்காங்க ,,, புரிஞ்சுக்க நாம தான் ட்ரை பண்ணனும்...

0 comments: